Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தூத்துக்குடி துறைமுத்தில் சரக்கு கையாளுதல் திறன் 3.01% அதிகரிப்பு

தூத்துக்குடி துறைமுத்தில் சரக்கு கையாளுதல் திறன் 3.01% அதிகரிப்பு

செப்டம்பர் மாதத்தில் தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் 32 கப்பல்கள் 33,771 டிஇயு கொள்கலன்களை கையாண்டது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2.518 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 3.01 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த 2024 அக்டோபர் நிலவரப்படி, துறைமுகத்தில் மொத்த சரக்குக் கையாளுதல் 2.5 கோடி டன்னைத் தாண்டியது. கொள்கலன் கையாளுதல் 1.76 சதவீதம் அதிகரித்து, 5.02 லட்சம் டிஇயு (20 அடி நீளக் கொள்கலன் அலகு) ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 4.94 லட்சம் டிஇயுவாக இருந்தது.

நிலக்கரி கையாளுதல் 13.47 சதவீதம் அதிகரித்து, 9,217.90 டன்னிலிருந்து 10,459.94 டன்னாக உயர்ந்துள்ளது. உரக் கையாளுதலும் 2.33 லட்சம் டன்னிலிருந்து 5.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. செப்டம்பர்-5 நிலவரப்படி ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டது துறைமுகத்தின் சாதனையாகும். மேலும், 335.23 மீட்டர் நீளமுள்ள சிஎம்ஏ சிஜிஎம் தோரியம் கப்பலைக் கையாண்டதால் இதுவரை கையாளப்பட்ட மிக நீளமான கப்பல் என்ற பெருமையையும் துறைமுகம் பெற்றுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் 32 கப்பல்கள் 33,771 டிஇயு கொள்கலன்களை கையாண்டது. ஜேஎஸ்டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையம், 24 மணி நேரத்தில் 43,052 டன் நிலக்கரியை இறக்கி சாதனை படைத்தது.

ரயில் வழி சரக்குப் போக்குவரத்திலும் துறைமுகம் முன்னேற்றம் கண்டுள்ளது. செப்டம்பர் 29-ல் ஒரே நாளில் 8,061 டன் உரம் ரயிலில் அனுப்பப்பட்டது. ராஜா ஏஜென்சிஸ் நிறுவனம் 100 ரயில் பெட்டிகளில் 6,376.9 டன் உரத்தை அனுப்பி, தனிப்பட்ட முகவர் அளவில் சாதனை படைத்தது.

இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறுகையில், "சரக்குக் கையாளுதலில் துறைமுகம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு பங்களித்த கப்பல் நிறுவனங்கள், முனைய இயக்குநர்கள், வர்த்தகப் பங்காளர்கள், ஊழியர்களைப் பாராட்டினார். துறைமுக செயல்திறனை மேம்படுத்துதல், ரயில், கடல்வழிப் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்" என்றார்.

முந்தைய செய்தி
விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் அரிசி விலை உயர்வு
அடுத்த செய்தி
Link industrial support to export competitiveness: CEA

தொடர்புடைய செய்திகள்